Thursday, November 5, 2015

செம்ம்மொழிச் செல்வங்கள்

செம்ம்மொழிச் செல்வங்கள்

இறையனார் களவியல் உரை
முத்தொள்ளாயிரம்

இறையனார் களவியல் உரை
நக்கீரனாரால் 
எழுதப்பட்டது. களவு, கற்பு எனும் இரு பிரிவுகளை உள்ளடக்கி வெளி
வந்த நூல். முச்சங்க வரலாற்றைக் கூறும் நூல். தமிழ்மொழியில் எழுதப்பட்ட உரைநூல்களுக்கெல்லாம் முதன்மையாகவும் முன்னோடியாகவும் திகழ்வது. தமிழ் இலக்கிய உலகம் இதற்கு முன் கண்டிராத ஒரு புதுமையாய் அமைந்த தலைசிறந்த நூல். தொல்காப்பியத்தின் வழி நூல். பழந்தமிழ் உரைநடையின் சிறப்பெல்லாம் இந்நூலில் காணலாம். இதனுள் புதைந்து கிடக்கும் கருத்துகள் பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லாதவை. இந்த நூலின் உரைநடையைத்தான் அடியார்க்கு நல்லார், பேராசிரியர், நச்சினார்க்கினியர் போன்ற பழந்தமிழ்ச் சான்றோர்கள் முன்மாதிரியாகக் கொண்டனர். உரையால் புகழ்பெற்ற இச்செம்மொழிச் செல்வத்தை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இராவ்பகதூர் பவானந்தம் பிள்ளைப் பதிப்பை பின்பற்றி இந்நூலை வெளியிட்டுள்ளோம். இந்நூலுக்கு செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் இரா.இளங்குமரனார் தக்க அறிமுகஉரை தந்து எங்களைப் பெருமைப்படுத்தியுள்ளார். அவர்க்கு எம் நன்றி.
முத்தொள்ளாயிரம்
மூவேந்தர்களைப் பற்றி எழுதப்பட்ட நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. மூவேந்தர்களின் ஆட்சிக்காலச் சிறப்பையும், இயற்கை வளத்தையும், நாட்டு வளத்தையும், நல்லறத்தையும்; இதற்கெல்லாம் மேலாக பசியும், பிணியும் நீங்குவதற்கும் வள்ளுவ நெறியை அடியொற்றியும் எழுதப்பட்ட நூல். இந்நூலுக்கு செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அறிமுகவுரை எழுதி சிறப்புச் செய்துள்ளார்.
- கோ. இளவழகன்
பதிப்பாளர்

No comments:

Post a Comment